search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    போலி விதைகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - உழவர் உழைப்பாளர் கட்சி வலியுறுத்தல்

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தை அமல்படுத்துவதால், கிராமப்புறங்களில் விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை.
    பல்லடம்:

    போலி விதைகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உழவர் உழைப்பாளர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.  

    இதுகுறித்து பல்லடத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி மாநிலத் தலைவர் செல்லமுத்து நிருபர்களிடம் கூறியதாவது:

    விவசாயத்திற்கு என்று தனியாக பட்ஜெட் போட்டு விவசாயிகளுக்கான அரசு என்று காட்டிக் கொண்டு போலி நாடகம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் விவசாயிகள் முன்னேற்றம் அடையவில்லை. மக்காசோளம், முருங்கை, பாகற்காய், கத்திரி,வெங்காயம் போன்றவற்றில் போலி விதைகள் விற்பனை அதிகரித்துள்ளது. 

    இதனால் விவசாயிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது பயிர்கள் விதைக்கும் பருவகாலம் என்பதால், வேளாண்மை பல்கலைக்கழகம், விதைக்கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் தரமான விதைகளை விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும். 

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தை அமல்படுத்துவதால், கிராமப்புறங்களில் விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. இதனால் விவசாயம் பாதிப்பு அடைந்துள்ளது. ஆட்கள் கிடைக்காததால் விவசாயிகள் பலர் விவசாயத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.

    இதனால் பயிரிடும் விவசாய நிலங்களின் பரப்பளவு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதன் காரணமாக உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்க அந்த திட்ட பயனாளிகளை விவசாய பணிக்கு ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்த தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டமானது விவசாய பணி இல்லாத காலத்தில் மற்ற பணிக்கு ஒதுக்கீடு செய்யலாம் என்று தான் திட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால் திட்ட நோக்கம் நிறைவேற்றப்படவில்லை. இது குறித்து உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில் நீதி மன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. 

    அரசு விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் முக்கியத்துவம் அளித்தால் மட்டுமே நாட்டில் உணவு பஞ்சம் வராது காங்கயம் அருகே ஊதியூரை சேர்ந்த விவசாயி மனோஜ் என்பவர் தனது விவசாய நிலத்தை எந்திர உதவியுடன் சமன் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது கார்களில் வந்த கும்பல் நாங்கள் தமிழகம் முழுவதும் மண் எடுக்க கான்ட்ராக்ட் எடுத்துள்ளோம்.

    லோடு ஒன்றுக்கு ரூ.1,500 கொடுக்க வேண்டும் என மிரட்டியுள்ளனர். தமிழக முதல்வர், அமைச்சர்கள் பெயரைச்சொல்லி மிரட்டி வசூல் செய்து வருகின்றனர் .தமிழக முதல்வர் உடனடியாக இதில் தலையிட்டு, அந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    இல்லாவிட்டால் விவசாயிகளை ஒன்று திரட்டி உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×