என் மலர்

  செய்திகள்

  சமையல் கியாஸ்
  X
  சமையல் கியாஸ்

  அடுத்த வாரம் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயருகிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சமையல் கியாஸ் சிலிண்டர் விலை அடுத்த வாரம் உயர்த்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
  சென்னை:

  நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல் சமையல் கியாஸ் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

  ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்தில் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாதந்தோறும் சமையல் கியாஸ் விலை உயர்த்தப்படுகிறது.

  இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி மாதம் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டர் ரூ.710-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. பிப்ரவரி மாதம் ரூ.785, மார்ச் மாதம் ரூ.835 என உயர்ந்து வந்தது.

  ஏப்ரல் மாதத்தில் ரூ.10 குறைக்கப்பட்டு ரூ.825 ஆனது. மே, ஜூன் மாதங்களில் அதே விலையே நீடித்தது. ஜூலை மாதம் ரூ.850.50 ஆக உயர்ந்தது. ஆகஸ்டு மாதம் 875.50 ஆக உயர்த்தப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் ரூ.25 உயர்த்தப்பட்டு ரூ.900.50-க்கு விற்கப்பட்டது.

  இந்த மாத தொடக்கத்தில் கியாஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.15 உயர்த்தப்பட்டது. தற்போது சிலிண்டர் விலை ரூ.915.50-க்கு விற்கப்படுகிறது.

  இந்த நிலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை அடுத்த வாரம் உயர்த்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து எண்ணெய் துறை வட்டாரங்கள் கூறியதாவது:-

  சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை அடுத்த வாரம் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது. 14.2 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை கடைசியாக அக்டோபர் 6-ந்தேதி ரூ.15 அதிகரிக்கப்பட்டது.

  செலவினத்துக்கு ஏற்ப சில்லரை விற்பனை விலையை எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் அதிகரிக்க அனுமதிக்கப்படவில்லை, இந்த இடைவெளியை குறைக்க அரசு இதுவரை மானியம் எதையும் அங்கீகரிக்கவில்லை. இதன் அடிப்படையிலேயே இந்த விலை உயர்வு இருக்கும்.

  இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.  Next Story
  ×