search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகை அணை
    X
    வைகை அணை

    60 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம்

    தொடர் மழை மற்றும் பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 60 அடியை எட்டி உள்ளது.
    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள வைகை அணையின் மொத்த உயரம் 71 அடி ஆகும். கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்திலும், அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் தொடர் மழை பெய்து வந்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து வந்தது.

    மேலும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 59.94 அடியாக உள்ளது. வரத்து 1907 கன அடி. நேற்று வரை 569 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று காலை முதல் 769 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 3590 மி. கன அடியாக உள்ளது.

    ஏற்கனவே மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் உச்சபட்ச அளவான 55 அடியிலேயே நிலை நிறுத்தப்பட்டுள்ளது. வரத்து 376 கன அடி. இதில் 100 கன அடி மதகுகள் வழியாகவும், 276 கன அடி உபரியாகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இருப்பு 435.32 மி.கன அடி.

    சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 126.77 அடி. வரத்து மற்றும் திறப்பு 50 கன அடி. இருப்பு 100 மி.கன அடி.
    Next Story
    ×