search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முருங்கைக்காய்
    X
    முருங்கைக்காய்

    உடன்குடி பகுதியில் முருங்கை சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்

    குறைந்த செலவில் அதிக வருமானம் பெறுவதற்கும் மற்ற விவசாய பயிர்களை விட முருங்கை சாகுபடியே செலவு குறைவு என்பதால் விவசாயிகள் முருங்கை விவசாயத்தைப் போட்டி போட்டு பயிரிட்டு வருகின்றனர்.
    உடன்குடி:

    உடன்குடி வட்டாரப்பகுதியில் பருவ மழை பெய்யாவிட்டாலும் அடிக்கடி சாரல் மழை பெய்கிறது. இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் குறைந்த காலத்தில் அதிக வருமானம் பெறுவதற்கு முருங்கை சாகுபடியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    செம்மணல் தேரி பகுதியில் முருங்கை நன்றாக வளரும் என்ற நம்பிக்கையிலும், ஒரு கிலோ எடையுள்ள முருங்கைக்காய் ரூ.30 முதல் ரூ.40 வரை விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் குறைந்த அளவு நீர் பாய்ச்சினால் முருங்கை நன்றாக வளரும்.

    சொட்டு நீர் பாசனம் அல்லது வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை தண்ணீர் பாய்ச்சினால் நன்றாக வளருகிறது. குறைந்த செலவில் அதிக வருமானம் பெறுவதற்கும் மற்ற விவசாய பயிர்களை விட முருங்கை சாகுபடியே செலவு குறைவு என்பதால் விவசாயிகள் முருங்கை விவசாயத்தைப் போட்டி போட்டு பயிரிட்டு வருகின்றனர்.

    முருங்கை பூ பூத்து, காய்க்கும் பருவத்தில் இயற்கையால் இடையூறு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று விவசாயி ஒருவர் தெரிவித்தார்.

    Next Story
    ×