search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அவிநாசி கல்லூரி - கற்போர் உதவி மையத்தில் பயில விண்ணப்பிக்கலாம்

    சமீப காலமாக கற்பித்தலானது கொரோனா தொற்றால் இணையவழி வகுப்புகளாக நடைபெற்று வருகிறது.
    அவிநாசி:

    அவிநாசி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் கற்போர் உதவி மையத்தில் தொலைதூர கல்வி கற்போர் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தினர் கூறியதாவது:

    தொலைதூர கல்வி கற்போர் மையம் அவிநாசி அரசு கல்லூரியில் சென்ற ஆண்டு துவங்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருகிறது. இதற்காக தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின், கற்போர் உதவி மையம் நிறுவப்பட்டுள்ளது. இம்மையத்தில் தொலைதூர கல்வித் தேர்வு மற்றும் வார இறுதி நாள் வகுப்புகள் நடைபெறும் .

    இதில் கல்லூரி படிப்பில் இடைநின்ற மாணவர்கள், வீட்டில் உள்ள பெண்கள், வேலைக்கு செல்வோர், கல்லூரியில் பயிலும் மாணவர்களே கூட மேலும் தான் விரும்பும் மற்றொரு பாடத்தை  பயில பயனடையலாம். சமீப காலமாக கற்பித்தலானது கொரோனா தொற்றால் இணையவழி வகுப்புகளாக நடைபெற்று வருகிறது.

    இதன்மூலம் 32 இளநிலை, 31 முதுநிலை, 15 டிப்ளமோ, 12 சான்றிதழ், 10 குறுகிய காலப் படிப்புகள் கற்றுத் தரப்படுகிறது. இவையனைத்தும், இந்தியப் பல்கலைக்கழக மானியக்குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளவை. அரசுப் பணியில் சேர்வதற்கும் ஏற்புடையது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

    ஆகவே தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கு இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அதில் அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை ( 333005 ) கற்போர் மையமாக தேர்வு செய்தல் அவசியம். பாடப்புத்தகங்கள், அடையாள அட்டை அஞ்சல் மூலமாக வீட்டுக்கு அனுப்பப்படும்.

    விண்ணப்பிக்க விரும்புவோர் ஆதார் அட்டை, பான்கார்டு, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை, கடவுச்சீட்டு இவற்றில் ஏதேனும் ஒன்று, ஸ்கேன் செய்யப்பட்ட பாஸ்போர்ட் போட்டோ, கல்விச்சான்றிதழ்கள், ஜாதிச்சான்று ஆகியவற்றுடன் உரிய மின்னஞ்சல் முகவரியுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    இணையவழியில் சேர்க்கை கட்டணம் செலுத்தும் வசதியும் உள்ளது. இல்லையெனில் தமிழ்நாடு ஓப்பன் யுனிவர்சிட்டி என்ற பெயரில் எடுக்கப்பட்ட வரைவோலையைக் கொண்டும் செலுத்தலாம் அல்லது கற்றல் மையம் மூலமாக நேரடியாக செலுத்தலாம். அக்டோபர் 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும்விவரங்களுக்கு 99441-51592 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
    Next Story
    ×