search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பள்ளிகளில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நோட்டீஸ்

    குழந்தைகள் என்பதால் பாதுகாப்பு வழிமுறையை பின்பற்றுவதில் தடுமாற்றம் இருக்கவே செய்யும்.
    திருப்பூர்:

    9 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்து கற்பித்தல் பணி நடந்து வருகிறது. ஊரடங்கு இடையில் ஏற்கனவே இம்மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டதால் தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகள், வழிமுறைகள் குறித்து புரிதல் உள்ளது.

    ஆனால் ஒன்று முதல்8-ம்வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 19 மாதங்களுக்கு பின் வரும் 1-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. ஊரடங்குக்கு பின் முதன்முறையாக பள்ளிக்கு வருகை புரிகின்றனர்.

    இவர்களுக்கு பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்த புரிதல் குறைவாகவே இருக்கும். குழந்தைகள் என்பதால் பாதுகாப்பு வழிமுறையை பின்பற்றுவதில் தடுமாற்றம் இருக்கவே செய்யும். இதற்கு தீர்வாக  பள்ளி வளாகங்களில், மாணவர்களின் கண்ணுக்கு தெரியும்படி விழிப்புணர்வு வாசகங்களை ஒட்டுமாறு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

    குறிப்பாக, ‘கை சுத்தம் உயிர் பேணும், உணவு பொருட்களை பரிமாறிக் கொள்வதை தவிர்ப்போம், தனிமனித இடைவெளியை பின்பற்றுவோம், பிறரை தொடுவதை தவிர்ப்போம், கூட்டத்தை தவிர்க்கவும், கை சுத்திகரிப்பானால் கைகளை சுத்தம் செய்யவும்,  முக கவசம் கட்டாயம் அணியவும் போன்ற வாசகங்களை அனுப்பியுள்ளது.

    இதையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் அந்த நோட்டீஸ்களை பள்ளிகளில் ஒட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
    Next Story
    ×