search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூரில் நாளை முதல் காற்று மாசு ஆய்வு

    பொதுமக்கள் காற்று மாசு அதிகரிக்காத வகையில் தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும் என மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், இயற்கை ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
    திருப்பூர்:

    மாசுகட்டுப்பாடு வாரியம் ஆண்டுதோறும் தீபாவளியின்போது காற்று மாசு குறித்து சிறப்பு ஆய்வு நடத்துகிறது. திருப்பூரில் நாளை 28-ந்தேதி முதல் நவம்பர் 12-ந்தேதி வரை தொடர்ந்து 14 நாட்கள் தீபாவளி பண்டிகை கால காற்று மாசு ஆய்வு நடத்தப்பட உள்ளது.

    மாசுகட்டுப்பாடு வாரிய துணை முதன்மை விஞ்ஞானி கலைச்செல்வி தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர் இந்த ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இதற்காக திருப்பூர் குமரன் வணிக வளாகம் மற்றும் ராயபுரத்தில் உள்ள பறக்கும்படை அலுவலகத்தில் ‘ஆப்பியன்’ காற்று தர அளவீட்டுக் கருவி வைக்கப்பட உள்ளது.

    காற்றில் மிதக்கும் 10 மைக்ரானுக்கு கீழ் உள்ள துகள்கள் (பி.எம்.,10),  2.5 மைக்ரானுக்கு கீழ் உள்ள துகள் (பி.எம்.,2.5), சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு, அலுமினியம், பேரியம், இரும்பு தாதுக்கள் அளவுகள் கணக்கிடப்பட உள்ளது. 

    குடியிருப்புகள் மிகுந்த ராயபுரத்தில் ஒலி மாசு அளவு கணக்கிடப்பட உள்ளது. பண்டிகைக்கு முன், பண்டிகை நாள் மற்றும் பண்டிகைக்குப்பின் பதிவாகும் அளவு அடிப்படையில் திருப்பூரில் காற்றை மாசுபடுத்தும் பட்டாசு ரகங்கள் அதிகம் வெடிக்கப்பட்டுள்ளனவா?காற்று மாசு எந்தளவு அதிகரித்துள்ளது என்கிற விவரங்கள் தெரிய வரும்.

    பொதுமக்கள் காற்று மாசு அதிகரிக்காத வகையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடவேண்டும் என மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், இயற்கை ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
    Next Story
    ×