என் மலர்

  செய்திகள்

  மு.க. ஸ்டாலின்
  X
  மு.க. ஸ்டாலின்

  பட்டாசுக்கடை தீ விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரத்தில் பட்டாசுக்கடையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஐவர் உயிரிழந்தனர் என அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன் என முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
  கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரத்தில் உள்ள பட்டாசுக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  இந்த நிலையில் மு.க. ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் ‘‘கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரத்தில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஐவர் உயிரிழந்தனர் என அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தோருக்கு தலா ரூ.5 லட்சமும்; தீவிர சிகிச்சையில் இருப்போருக்கு தலா ரூ.1 லட்சமும் #CMRF நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்’’ எனப்பதிவிட்டுள்ளார்.
  Next Story
  ×