search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்டிட பொறியாளர்கள் - மாற்றுத்திறனாளிகள்.
    X
    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்டிட பொறியாளர்கள் - மாற்றுத்திறனாளிகள்.

    திருப்பூரில் கட்டிட பொறியாளர்கள் - மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

    ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பொறியாளர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் நிறைவேற முழக்கங்கள் எழுப்பினர்.
    திருப்பூர்:

    தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே கட்டுமான பொருட்களான சிமெண்ட், கம்பி, மின்சாதன பொருட்கள், பிளாஸ்டிக் பைப் வகைகள் விலை உயர்ந்து வருகிறது. 

    இதனால் கட்டுமான தொழில் பாதிக்கப்படுவதாகவும், கட்டுமானத் தொழில் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்தும் வகையில் கட்டுமான பொருட்களின் விலை நிர்ணய ஆணையம் அமைத்திட வலியுறுத்தி இன்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திருப்பூர் கட்டிட பொறியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

    இதில் ஏராளமான பொறியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் நிறைவேற முழக்கங்கள் எழுப்பினர்.

    குடிசை மாற்று வாரியத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் வீடுகளை இலவசமாக வழங்க வேண்டும், தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
    Next Story
    ×