search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சி.ஐ.டி.யு. ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.
    X
    சி.ஐ.டி.யு. ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.

    பல்லடத்தில் மின்வாரிய தொழிலாளர்கள் - உள்ளாட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

    பல்லடம் நகராட்சி முன்பு, சி.ஐ.டி.யு. ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    பல்லடம்:

    பல்லடத்தில் மின்வாரிய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

    தமிழக அரசு தொழிலாளர்களுக்கு தீபாவளி போனசாக 10 சதவீதம் அறிவித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நியாயமான போனசை வழங்க வலியுறுத்தியும், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சங்கத்தின் பல்லடம் மின்பகிர்மான வட்ட கிளை செயலாளர் கந்தசாமி தலைமை வகித்தார். இதில் பொருளாளர் ஜான்சன் சாமுவேல் மற்றும் ராமலிங்கம் (சி.ஐ.டி.யு), முத்துசாமி,ஆனந்தசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் நகராட்சி முன்பு, சி.ஐ.டி.யு. ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகராட்சி, நகராட்சிகளில் தூய்மைப் பணியில் தனியார்மயத்தை கைவிட வேண்டும். நகராட்சி நிர்வாக இயக்குனரின் 2.10.2021 உத்தரவை திரும்பப்பெற வேண்டும். ஒப்பந்த பணியாளர்களுக்கு அரசாணை 62- ன் படி ஊதியம் வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் சட்டப்படி போனஸ் வழங்க வேண்டும். 

    பல ஆண்டுகளாக வேலை செய்யும் தூய்மைப்பணியாளர் குடிநீர் பணியாளர், மற்றும் ஓட்டுனர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு., சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    இதில் பல்லடம் சி.ஐ.டி.யு., பொறுப்பாளர் பரமசிவம், சி.ஐ.டி.யு., சங்க மாவட்ட  செயலாளர் ரங்கராஜ் மற்றும் தூய்மைப்பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×