search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளிகள் திறப்பு
    X
    பள்ளிகள் திறப்பு

    1-ந்தேதி பள்ளிகள் திறப்பு: பழைய பஸ்பாஸ் காட்டி மாணவர்கள் பயணம் செய்யலாம் - போக்குவரத்து துறை

    1 முதல் 8-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பள்ளிகள் வருகிற 1-ந்தேதி திறக்கப்படுகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும், பாதுகாப்பு முறைகளையும் பள்ளி கல்வித்துறை அறிவித்து இருந்தன.

    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மெல்ல மெல்ல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

    கல்லூரிகள் மற்றும் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கான பள்ளிகள் கடந்த செப்டம்பர் 1-ந்தேதி திறக்கப்பட்டன. கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறையின் கீழ் பள்ளிகள், கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

    இதற்கிடையே 1 முதல் 8-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பள்ளிகள் வருகிற 1-ந்தேதி திறக்கப்படுகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும், பாதுகாப்பு முறைகளையும் பள்ளி கல்வித்துறை அறிவித்து இருந்தன.

    இந்த நிலையில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் பஸ்களில் இலவசமாக செல்வதற்கான அறிவிப்பை போக்குவரத்துதுறை இன்று வெளியிட்டது.

    பஸ் பாஸ்

    அதன்படி பழைய பஸ்பாசை காட்டி மாணவர்கள் பஸ்களில் செல்லலாம். பழைய பஸ்பாஸ் இல்லாத மாணவ-மாணவிகள் தங்களிடம் உள்ள அடையாள அட்டையை காண்பித்தும் பேருந்துகளில் செல்லலாம்.

    ஏற்கனவே பயன்படுத்திய சீருடையில் மாணவ- மாணவிகள் பஸ்களில் செல்லலாம் என்றும் போக்குவரத்துதுறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இதையும் படியுங்கள்...நிருபர் கேள்வியால் ஷாக் ரியாக்சன் கொடுத்த கோலி - வைரலாகும் வீடியோ

    Next Story
    ×