search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    விரைவில் செயல்பாட்டுக்கு வரும் பொது பயன்பாட்டு மையம் - நவீன எந்திரங்கள் கொள்முதல் செய்யும் பணிகள் தீவிரம்

    திருப்பூர் - தாராபுரம் ரோடு, பலவஞ்சிபாளையம் ரிங் ரோட்டில் இரண்டு ஏக்கர் நிலம் 16 ஆண்டு குத்தகைக்கு பெறப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் தொழில் பாதுகாப்புக்குழு குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை இணைத்து பின்னலாடை துறை சார்ந்த பொது பயன்பாட்டு சேவை மையங்களை உருவாக்கி வருகிறது. 

    இந்தநிலையில் அப்பேரல் கிளஸ்டர் என்கிற பெயரில் ஆயத்த ஆடை பொது பயன்பாட்டு மையம் அமைப்பதற்காக 40 பின்னலாடை துறையினரை இணைத்து குழு உருவாக்கப்பட்டுள்ளது. 

    இதன் மூலம் ரூ.17 கோடி மதிப்பில் பொது பயன்பாட்டு மையம் அமைக்க அரசு அனுமதி பெறப்பட்டது. இம்மையத்துக்கு மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்குகின்றன.

    திருப்பூர் - தாராபுரம் ரோடு, பலவஞ்சிபாளையம் ரிங் ரோட்டில் இரண்டு ஏக்கர் நிலம் 16 ஆண்டு குத்தகைக்கு பெறப்பட்டுள்ளது. அந்த இடத்தில் பொது பயன்பாட்டு மையம் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    இம்மையத்தில் நவீன டிஜிட்டல் ரோல் பிரிண்டிங் எந்திரம், ரவுண்ட் பிரின்டிங் எந்திரங்கள், 5 டிஜிட்டல் செஸ்ட் பிரின்டிங் எந்திரம், சப்ளிமேஷன் பிரின்டிங் எந்திரம் 3, எம்ப்ராய்டரி  எந்திரம், ரேப்பியர் லேபிள் உட்பட பல்வேறு அதிநவீன எந்திரம் நிறுவப்பட உள்ளன.

    கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளதையடுத்து பொது பயன்பாட்டு மையத்தில் நிறுவுவதற்காக முதல் கட்ட எந்திரம் கொள்முதலுக்கு தொழில் துறையினர் தயாராகிவிட்டனர். 

    இந்தநிலையில் திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மோகனசுந்தரம், மேலாளர் திருஞானம், திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவசங்கர் ஆகியோர்  சிறு தொழில் மேம்பாட்டு கழக (டான் சிட்கோ) கோவை கிளை மேலாளர் ஷர்மிளாவை சந்தித்தனர்.

    அப்போது பொது பயன்பாட்டு மைய கட்டுமான பணிகள் நிறைவடைந்ததற்கான ஆவணங்கள், எந்திரம் கொள்முதலுக்கு டெண்டர் விடுவதற்கான கடிதம் வழங்கினர்.
    Next Story
    ×