search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூர் மாவட்டத்தில் வெள்ள அபாய பகுதிகளை கண்காணிக்க சிறப்பு குழு - தன்னார்வலர்களுக்கும் அழைப்பு

    திருப்பூர் தெற்கு தாலுகாவில் உள்ள நொய்யல் ஆறு, சங்கிலிப்பள்ளம் ஓடை, ஜம்மனை ஓடை அதிகபட்ச வெள்ள அபாயம் உள்ள பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த கால பாதிப்புகள் அடிப்படையில் 41 பகுதிகள் வெள்ள அபாயம் மிகுந்த பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

    திருப்பூர் தெற்கு தாலுகாவில் உள்ள நொய்யல் ஆறு, சங்கிலிப்பள்ளம் ஓடை, ஜம்மனை ஓடை அதிகபட்ச வெள்ள அபாயம் உள்ள பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ளது. 

    தாராபுரம் தாலுகாவில் கோனேரிப்பட்டி கிராமம் மிதமான வெள்ள அபாயம் உள்ள பகுதியாகவும் மற்ற 37 பகுதிகள் குறைந்த வெள்ள அபாயம் உள்ள பகுதிகளாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. வெள்ள அபாயத்தில் இருந்து மக்களை பாதுகாக்க வசதியாக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். இந்திய மருத்துவ சங்க உதவியுடன், மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளும், பேரிடர் காலத்தில் சேவையாற்ற தேவையான உபகரணம், மருந்து, மாத்திரை, ஆம்புன்ஸ்களுடன் தயாராக இருக்க வேண்டும்.

    பள்ளி வளாகங்கள், பள்ளி வளாகத்தில் உள்ள கால்வாய்களில் உள்ள அடைப்புகளை சரிசெய்தல், சேதமான கட்டிடங்களை கண்டறிந்து பயன்பாட்டில் இருந்து நீக்குதல், மின் இணைப்பு மற்றும் மின் சாதனங்களை பழுதுநீக்கி நல்ல முறையில் பராமரிக்க வேண்டும்.

    அரசு சாரா அமைப்புகள், தன்னார்வலர்கள், பொதுநல அமைப்புகள், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயலாற்ற வேண்டும். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும். உள்ளாட்சிகளுடன் இணைந்து பொது சமையலறையை உருவாக்க வேண்டும்.

    அரசுடன் இணைந்து பணியாற்ற விரும்புவோர் அதற்கான இணையதளத்தில் பதிவு செய்யலாம். அதற்காக புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

    விருப்பமுள்ள தன்னார்வலர், பேரிடர் மேலாண்மை பிரிவின்,https://beta-tnsmart.rimes.int/intex.php/MIS/Disaster_Response/ngo_registration தனியார் மருத்துவமனைகள் என பேரிடர் மேலாண்மை பிரிவின் இணையதள ‘லிங்க்‘கில்  தங்களின் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  
    Next Story
    ×