search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்ற காட்சி.
    X
    அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்ற காட்சி.

    பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேட்டி

    வெள்ளகோவில் நகராட்சிக்குட்பட்ட உப்புபாளையம் காலனி, வையாபுரிநகர், நெசவாளர்காலனி,உப்புபாளையம், வேலகவுண்டம் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து அமைச்சர் மனுக்களை பெற்றுக் கொண்டார்.
    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது :

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களின் நகர்ப்புற வளர்ச்சிக்கென பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். நகர்ப்புற பகுதிகளில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கண்டறிந்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.

    அந்த வகையில் நகராட்சி பகுதிகளில் செயல்படுத்தப்படும் குடிநீர் விநியோக திட்டங்கள், தெருவிளக்கு பராமரிப்பு, அடிப்படை வசதிகளுக்காக நிறைவேற்றப்படும் திட்டங்கள், தூய்மை பாரத இயக்கம், மேலும் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். 

    முன்னதாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெள்ளகோவில் நகராட்சிக்குட்பட்ட உப்புபாளையம் காலனி, வையாபுரிநகர், நெசவாளர்காலனி,உப்புபாளையம், வேலகவுண்டம் பாளையம், வேலகவுண்டம்பாளையம் காலனி, காளையுரான்வலசு, காளையுரான் வலசு காலனி, நாடார்பதி, பாரதிநகர், தீரன் சின்னமலைநகர், அழகாபுரிநகர், வாட்டர்டேங்க் மற்றும் காமராஜபுரம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
    Next Story
    ×