search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏற்காட்டில் பெய்த கனமழையினால் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
    X
    ஏற்காட்டில் பெய்த கனமழையினால் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    விடிய விடிய கன மழை - ஏற்காட்டில் ஒரே நாளில் 100 மி.மீ.மழை பதிவு

    ஏற்காட்டில் விடிய விடிய பெய்த கனமழையால் பல கிராமங்களில் சிறிது நேரம் மின்தடை ஏற்பட்டது. இதனால் மக்கள் அவதி அடைந்தனர்.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று காலை வெயில் அடித்தது. பின்னர் மாலையில் மழை பெய்ய தொடங்கியது. சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், எடப்பாடி, ஓமலூர், ஏற்காடு, சங்ககிரி, மேட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சேலம்மாநகரத்தில் புதிய பஸ் நிலையம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, ஜங்‌ஷன், அன்னதானப்பட்டி, கிச்சிப்பாளையம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஏற்காட்டில் பலத்த மழையால் பல கிராமங்களில் சிறிது நேரம் மின்தடை ஏற்பட்டது. இதனால் மக்களஅவதி அடைந்தனர். சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ஏற்காடு - 100 சங்ககிரி - 37, பெத்தநாயக்கன்பாளையம்- 36, எடப்பாடி- 22, மேட்டூர்-18.4, ஓமலூர்- 18, காடையாம்பட்டி - 4, சேலம்-1.6, ஆத்தூர் - 1 சேலம் மாவட்டத்தில் மொத்தம் 238 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    Next Story
    ×