search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    குமரியில் புதிதாக 21 பேருக்கு கொரோனா தொற்று

    பொது இடங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு தொடர்ந்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. நேற்று முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாத 89 பேர் சிக்கினர்.
    நாகர்கோவில்:

    கொரோனா இரண்டாவது அலை குமரி மாவட்டத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஏப்ரலில் தொடங்கிய பாதிப்பு மே மாதத்தில் உச்சத்தை தொட்டது. மே மாதத்தில் தினசரி தொற்று பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது.

    இதனையடுத்து அமல்படுத்தப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகளால் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் குறையத் தொடங்கியது. கடந்த ஜூலை மாதம் முதல் தினசரி தொற்று பாதிப்பு மிகக்குறைவாகவே இருந்து வருகிறது.

    தற்போது சராசரியாக தினமும் 20பேர் மட்டுமே தொற்று பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 10-க்கு கீழ் குறைந்தது. நேற்றுமுன்தினம்(21-ந்தேதி) 14பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று 21 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து வந்த ஒருவரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளார். பண்டிகை காலம் என்பதால் பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தொற்று பாதிப்பு தற்போது குறைந்து வந்த போதிலும், நோய் தடுப்பு நடவடிக்கைகள் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முக்கியமாக கொரோனா பரிசோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.

    குமரி மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் பரிசோதனை மையங்களிலும், சோதனைச் சாவடிகள் மற்றும் களப் பணியாளர்கள் மூலமாகவும் இதுவரை 12 லட்சத்து 25ஆயிரத்து 841 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

    அதேபோன்று பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. நேற்று முதலாவது டோஸ் 568பேருக்கும், இரண்டாவது டோஸ் 1,646 பேருக்கும் என மொத்தம் 2,214 பேருக்கு செலுத்தப்பட்டு இருக்கிறது.

    மாவட்டத்தில் இதுவரை முதலாவது டோஸ் 10,40,454 பேருக்கும், இரண்டாவது டோஸ் 3,55,209 பேருக்கும் செலுத்தப்பட்டு இருக்கிறது. இரண்டு டோஸ்களும் சேர்த்து இதுவரை மொத்தம் 13,95,663 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டுள்ளது.

    அவர்களில் நீரிழிவு நோய் மற்றும் அதன் இணைநோய் பாதித்தவர்கள் 58,436பேரும், கர்ப்பிணி பெண்கள் 15,609பேரும், பாலூட்டும் தாய்மார்கள் 14,913 பேரும் அடங்குவர்.

    பொதுஇடங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு தொடர்ந்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. நேற்று முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாத 89 பேர் சிக்கினர். அவர்களிடமிருந்து ரூ17,800 அபராதம் வசூலிக்கப்பட்டது.

    குமரி மாவட்டத்தில் இதுவரை வசூலிக்கப்பட்ட அபராத தொகை ரூ.2.75 கோடியை தாண்டிவிட்டது. மாவட்டம் முழுவதும் நேற்று வரை 1,27,034 பேரிடம் இருந்து ரூ.2கோடியே 75 லட்சத்து 23 ஆயிரத்து 800அபராதம் வசூல் செய்யப்பட்டிருக்கிறது.
    Next Story
    ×