search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர் இளங்கோவன்
    X
    ஆர் இளங்கோவன்

    2014 முதல் 2020-ம் ஆண்டு வரை ரூ.3.78 கோடி சொத்து குவித்ததாக இளங்கோவன்-மகன் மீது வழக்கு

    இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீன்குமார் ஆகியோர் மீது கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    சேலம்:

    சேலம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும், மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவராகவும் இருப்பவர் ஆர். இளங்கோவன். இவரது மகன் பிரவீன்குமார். இவர் திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள சுவாமி அய்யப்பன் கல்வி நிறுவனங்களின் துணை தலைவராக உள்ளார்.

    இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீன்குமார் ஆகியோர் மீது கடந்த 2014 ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக 3.78 கோடி வரை சொத்து குவித்ததாக சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.

    சமீப காலமாக கூட்டுறவு வங்கிகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியானது. அதன் அடிப்படையிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

    கூட்டுறவு வங்கி தலைவரான இளங்கோவன் கடந்த சட்டமன்ற தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிக்கும் தேர்தல் பொறுப்பாளராக இருந்த நிலையில் 10 தொகுதிகளை அ.தி.மு.க. கைப்பற்றியது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக கருதப்பட்டவர் இளங்கோவன் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×