search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அலுவலக கட்டிட பணிகளை தேசிய செயலாளர் அருண்சிங், மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் பார்வையிட்டபோது எடுத்தப்படம்.
    X
    அலுவலக கட்டிட பணிகளை தேசிய செயலாளர் அருண்சிங், மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் பார்வையிட்டபோது எடுத்தப்படம்.

    மின்வாரிய விவகாரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு தொடர்ந்தால் சட்டப்படி சந்திப்பேன் - திருப்பூரில் இன்று அண்ணாமலை பேட்டி

    தமிழகம் முழுவதும் பா.ஜ.க. கட்சியை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் கட்சிக்கென சொந்த அலுவலகங்கள் கட்டப்பட்டு வருகிறது.
    திருப்பூர்:

    திருப்பூர் வித்தியாலயம் பகுதியில் பா.ஜ.க. மாவட்ட அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. அந்த பணிகளை பா.ஜ.க.,தேசிய செயலாளர் அருண்சிங், மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய செயற்குழு உறுப்பினர்கள் சி.பி .ராதாகிருஷ்ணன், பொன் ராதாகிருஷ்ணன், தமிழக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் இன்று ஆய்வு செய்தனர் . 

    பின்னர் பா.ஜ.க.,மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது :

    தமிழகம் முழுவதும் பா.ஜ.க. கட்சியை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் கட்சிக்கென சொந்த அலுவலகங்கள் கட்டப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் கட்டப்பட்ட அலுவலகத்தை அடுத்த மாதம் (நவம்பர்) 10-ந்தேதி தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வருகை தந்து திறந்து வைக்க உள்ளார்.  

    மேலும் இங்கிருந்தவாறு ஈரோடு, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டப்பட்ட கட்சி அலுவலகங்களை காணொலிக்காட்சி மூலமாக திறந்து வைக்க உள்ளார் என்றார். 

    இந்தநிலையில் மின்சாரம் கொள்முதலில் முறைகேடுகள் நடப்பதாக  தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மீது பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை புகார் தெரிவித்திருந்தார். 

    இதற்கு பதில் அளித்த செந்தில்பாலாஜி, முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்களை அண்ணாமலை என்னிடம் அளிக்க வேண்டும். இல்லையென்றால் அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்வதுடன் அவர் மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். 

    இந்த விவகாரம் தொடர்பாக அண்ணா மலையிடம் இன்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்கமாட்டேன். செந்தில்பாலாஜி வழக்கு தொடர்ந்தால் அதனை சட்டப்படி சந்திப்பேன் என்றார். 
    Next Story
    ×