search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    சரக்கு வாகனங்களில் பயணிக்கும் கிராமப்புற மாணவர்கள் - போலீசார் எச்சரிக்கை

    சரக்கு வாகனத்தில் பொதுமக்களை ஏற்றிச்செல்லக்கூடாது. ஆனால் சிலர் தங்களது அவசர பயணத்திற்கு சரக்கு வாகனத்தை பயன்படுத்துகின்றனர்.
    உடுமலை:

    உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில் அதிகப்படியான அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மாணவர்கள் அரசு டவுன் பஸ் மற்றும் தனியார் வாகனங்களில் பள்ளிக்கு சென்று திரும்புகின்றனர். ஆனால் கிராமங்களுக்கு போதிய அளவில் பஸ்கள் இயக்கப்படாததால் மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

    சிலர் பள்ளிக்கு செல்ல சரக்கு வாகனங்களை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் பொதுமக்களும் திருவிழாக்கள் வீட்டு விசேஷம் என அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சரக்கு வாகனங்களை பயன்படுத்துவதை காணமுடிகிறது. 

    இதனால் கிராமப் புறங்களிலும் போக்குவரத்து விதிமுறை மீறல்களை கண்டறிந்து தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    போக்குவரத்து போலீசார் கூறுகையில் ,சரக்கு வாகனத்தில் பொது மக்களை ஏற்றிச் செல்லக்கூடாது. ஆனால் சிலர் தங்களது அவசர பயணத்திற்கு சரக்கு வாகனத்தை பயன்படுத்துகின்றனர். 

    பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லக் கூடாது என வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதுடன் எச்சரிக்கையும் செய்யப்படுகிறது என்றனர். 
    Next Story
    ×