search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    திருப்பூரில் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு - நவம்பர் 1 ந்தேதி முதல் அமல்

    தொழிற்சங்கத்தினர், சரக்கு போக்குவரத்து சங்கம் பேச்சுவார்த்தை நடத்தி சுமை பணி தொழிலாளருக்கு கூலி உயர்வு நிர்ணயிக்கின்றன.
    திருப்பூர்:

    திருப்பூர் பி.என்.,ரோடு சுற்றுப்பகுதிகளில் 100 - க்கும் மேற்பட்ட லாரி புக்கிங் நிறுவனங்கள் பின்னலாடைகளை வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கின்றன. 

    வாகனங்களில் சரக்கு ஏற்றுவது, இறக்குவது உள்ளிட்ட சுமைப்பணிகளில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.தொழிற்சங்கத்தினர், சரக்கு போக்குவரத்து சங்கம் பேச்சுவார்த்தை நடத்தி சுமை பணி தொழிலாளருக்கு கூலி உயர்வு நிர்ணயிக்கின்றன. கடந்த 2018 - ல் ஏற்படுத்தப்பட்ட கூலி உயர்வு ஒப்பந்தம் 2020 - ல் காலாவதியானது.

    புதிய ஒப்பந்தம் மேற்கொள்ள சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., அண்ணா தொழிற்சங்கம் மற்றும் சரக்கு போக்குவரத்து சங்கம் இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. 10 சுற்று பேச்சுவார்த்தைக்குப்பின் சுமூக தீர்வு எட்டப்பட்டு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

    அதில், வாகனங்களில் சரக்குகளை ஏற்றுவது மற்றும் இறக்குவதற்கான கூலி  நடப்பிலிருந்து டன்னுக்கு ரூ.20 உயர்த்தப்படுகிறது.அதன்படி டன்னுக்கு ரூ.130ஆக இருந்த கூலி ரூ.150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

    இரவு 9 மணிக்குமேல் பணிபுரியும் தொழிலாளருக்கு இரவுப்படி ரூ.350  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 9 டன் கொள்ளளவுள்ள வாகனத்தில் சரக்கு கட்டுவதற்கான கூலி நடப்பு தேதியில் இருந்து ரூ.50 , 16 டன் வாகனத்துக்கு கட்டு கூலி ரூ. 200, 21 டன் வாகனத்துக்கு ரூ.250 , 25 டன் வாகனத்துக்கு கட்டுக்கூலி ரூ. 300, 25 டன் டிரக் வாகனத்துக்கு கட்டுக்கூலி ரூ. 300 , 9 டன் கன்டெய்னர் வாகனத்துக்கு கட்டுக்கூலி ரூ. 50 ,அனைத்து கன்டெய்னர் வாகனத்துக்கும் மாமூல் 10 ரூபாய் வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. 

    புதிய கூலி உயர்வு வருகிற நவம்பர் 1 - ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. வரும் 2024 அக்டோபர் 30 - ந்தேதி வரை அமலில் இருக்கும் என இரு தரப்பினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×