search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி - தன்னார்வலர்களுக்கு அழைப்பு

    பள்ளிகளின் நேரம் போக மாலை 5மணி முதல்7 மணி வரை தன்னார்வலர்கள் வழியே மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
    உடுமலை:

    1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி ஒன்றரை ஆண்டு ஆகிறது. இந்த மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரி செய்ய ‘இல்லம் தேடி கல்வி’ என்ற பெயரில் புதிய கல்வி திட்டத்தை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

    பள்ளிகளின் நேரம் போக மாலை 5 மணி முதல் 7 மணி வரை தன்னார்வலர்கள் வழியே மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. வாரத்துக்கு குறைந்தது 6 மணி நேரம் குழந்தைகளுடன் செலவிட தயாராக இருக்க வேண்டும்.

    பகுதி நேரமாகவும் தன்னார்வலராக சேவை புரியலாம். கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள், illamthedikalvi.tnschools.gov.in என்ற இணையதள லிங்கில் தங்கள் விபரங்களை பதிவிடலாம் என திருப்பூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×