search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலா, ஜெயக்குமார்
    X
    சசிகலா, ஜெயக்குமார்

    கல்வெட்டு திறப்பு விவகாரம்- சசிகலாவுக்கு எதிராக காவல்நிலையத்தில் ஜெயக்குமார் புகார்

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எனக் கல்வெட்டு திறப்பது சட்டத்திற்குட்பட்ட செயல் அல்ல என ஜெயக்குமார் கூறினார்.
    சென்னை:

    அதிமுக பொன்விழாவையொட்டி சென்னை தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவில்லத்தில் சசிகலா அதிமுக கொடியை ஏற்றி வைத்தார். இது தொடர்பான கல்வெட்டையும் திறந்து வைத்தார். அதில், கொடியேற்றியவர் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என பொறிக்கப்பட்டிருந்தது. இதற்கு அதிமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், சசிகலா மீது அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னை மாம்பலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  அதில், எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் அதிமுக கொடி ஏற்றி வைத்து கல்வெட்டில், அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா என்று பொறிக்கப்பட்டது முற்றிலும் சட்டவிரோதமானது என்றும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  கூறி உள்ளார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், ‘அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எனக் கல்வெட்டு திறப்பது சட்டத்திற்குட்பட்ட செயல் அல்ல. சசிகலா மீது மோசடி வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சசிகலாவுக்கு தி.மு.க. உதவி செய்கிறது. குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் அ.தி.மு.க. பெயரை சசிகலா பயன்படுத்தி வருகிறார். சசிகலாவுக்கும், அ.தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை." என்று தெரிவித்தார். 
    Next Story
    ×