search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல்லடம் பஸ் நிலையத்தில் சைபர் கிரைம் குற்றம் குறித்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
    X
    பல்லடம் பஸ் நிலையத்தில் சைபர் கிரைம் குற்றம் குறித்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    பல்லடத்தில் சைபர் கிரைம் குற்றம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

    பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் சைபர் கிரைம் காவல் துறை சார்பில் விநியோகிக்கப்பட்டது.
    பல்லடம்:

    பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் சைபர் கிரைம் காவல் துறை சார்பில் விநியோகிக்கப்பட்டது. 

    பல்லடம் பஸ் நிலையத்தில் திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் காவல் நிலையம் சார்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு கூட்டத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். 

    சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் குமரேசன் வரவேற்றார். இந்த விழிப்புணர்வு முகாமில் சமூக வலைதளங்களில் போலியான வலைத்தள பக்கங்கள் மூலம் மோசடி, ஒ.டி.பி. மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ பணம் திருட்டு உள்ளிட்ட சைபர் கிரைம் குற்றச் சம்பவங்கள் நடக்கின்றன.

    இதுகுறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிந்தால் உடனே 155260 என்ற எண்ணிற்கோ அல்லது 8778807177 என்ற செல்போன் எண்ணுக்கோ அல்லது w.w.w.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் தெரிவித்தால் துரித நடவடிக்கை எடுக்கப்படும். 

    என்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு சைபர் கிரைம் காவல் துறை சார்பில் விநியோகிக்கப்பட்டது. இதில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, போலீசார் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×