search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    முதல் - அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 7,226 பேருக்கு ரூ.30.5 கோடியில் சிகிச்சை

    கடந்த மே மாதம் முதல் கடந்த17-ந்தேதி வரை 7 ஆயிரத்து 226 பேருக்கு ரூ.30 கோடியே 57 லட்சம் மதிப்பில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது
    திருப்பூர்:

    முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலமாக ஒரு குடும்பத்துக்கு வருடத்துக்கு ரூ.5 லட்சம் வரை சிகிச்சைக்கு வழங்கப்படுகிறது. மேலும் சில குறிப்பிட்ட சிகிச்சை முறைக்கு ஒரு வருடத்துக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.

    பச்சிளம் குழந்தைகளுக்கானசிகிச்சை முறை உள்பட 1,451 சிகிச்சை முறைகளும், 116 தொடர் சிகிச்சை வழி முறைகளும் மற்றும் 23 நோய் அறிதல் கண்டுபிடிப்பு முறைகளும் இந்த திட்டத்தின் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தின் மூலமாக கொரோனா தொற்று சிகிச்சை, இதயம் மற்றும் இதய நெஞ்சக அறுவை சிகிச்சை, புற்றுநோய் மருத்துவம், முடக்கு நீக்குஅறுவை சிகிச்சை, கண் நோய் சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை சம்பந்தமான சிகிச்சைகள், கர்ப்பப்பை நோய்கள், நுரையீரல், சிறுநீரக நோய்கள், மூளை மற்றும் நரம்பு மண்டலம், ரத்த குறைபாடு.

    மேலும் தொற்றுநோய், தோல் வியாதி, ஹார்மோன் சம்பந்தப்பட்ட நோய்கள், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை,இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சை, குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை, ரத்த குழாய்க்கான அறுவை சிகிச்சைகள், பொதுவான அறுவை சிகிச்சை ஆகிய முக்கிய சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது.

    திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தாராபுரம், உடுமலை, காங்கேயம், பல்லடம், அவினாசி, மடத்துக்குளம், ஊத்துக்குளி ஆகிய 8 அரசு மருத்துவமனைகள், 28 தனியார் மருத்துவமனைகளில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம்மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    மாவட்டத்தில் 7 லட்சத்து 16 ஆயிரத்து 368 பேருக்கு மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த மே மாதம் முதல் கடந்த 17-ந்தேதி வரை 7 ஆயிரத்து 226 பேருக்கு ரூ.30 கோடியே 57 லட்சம் மதிப்பில் மருத்துவ சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது. 

    அடையாள அட்டை கிடைக்காதவர்கள் ரேஷன் கார்டு நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் வருமான சான்றிதழ் (ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு கீழ்) ஆகிய ஆவணங்களை தயார் செய்து கலெக்டர் அலுவலகத்தில் அறை எண்.3-ல் கொடுத்து புகைப்படம் எடுத்து அடையாள அட்டையை பெறலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×