search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை உயர்நீதிமன்றம்
    X
    சென்னை உயர்நீதிமன்றம்

    யு.கே.ஜி. மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை

    நான்கு வயது மாணவியால் உறுதியான சாட்சியம் அளிக்க முடியும் என்று எதிர்பார்க்க முடியாது எனத் தெரிவித்த நீதிமன்ற நீதிபதி ஆசிரியருக்கு தண்டனை வழங்கியுள்ளார்.
    புதுச்சேரியில் 4 வயது மாணவி ஒருவரை ஆசிரியர் தனது மடியில் வைத்து, அந்த மாணவியின் அந்தரங்க பகுதியில் கைவைத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். வலி தாங்க முடியாத அந்த சிறுமி, தனது தாயாரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.

    தாயார் நீண்ட ஆலோசனைக்குப்பின் போலீசார் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து ஆசிரியரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றுள்ளது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 6-ந்தேதி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் குற்றம் சுமத்தப்பட்ட ஆசிரியரை விடுதலை செய்துள்ளது. அப்போது, பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான சிறுமியின் தாயார் சீரான வகையில் சாட்சியம் அளிக்கவில்லை. நம்பகமான ஆதாரங்கள், மருத்துவ ஆதாரங்கள் அரசு தரப்பு வாதங்களுக்கு சாதகமாக இல்லை.

    அவர்களுடைய சாட்சிகள் அடிப்படையில் குற்றவாளிக்கு எதிராக தண்டனை அளிக்க முடியவில்லை. சந்தேகத்திற்குரிய அனைத்து விசயங்களிலும் அரசு தரப்பு நிரூபிக்க தவறிவிட்டது என நீதிமன்றம் கூறியது.

    இந்தத் தீர்ப்பை எதிர்த்து அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது, அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் பரதா சக்ரவர்த்தி (தற்போது உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். நாளை அவர் நீதிபதியாக பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது), பாதிக்கப்பட்டவர் சிறுமி. அவருக்கு அப்போது நான்கு வயதே ஆனது. 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற கொடூர சம்பவம் குறித்து அவரால் தெளிவாகக் கூட பேச முடியாது. குற்றவாளி குறித்து அனைத்து சம்பவங்களையும் ஞாபகம் வைத்திருப்பார் என எதிர்பார்க்க முடியாது.

    அவர் சிலவற்றை மறந்திருக்கலாம். அவரின் சாட்சியத்தை நாம் புறந்தள்ளி விட முடியாது’’ எனக் குறிப்பிட்டார்.

    பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்றம் விசாரணை கோர்ட்டின் தீர்ப்பை திரும்பப் பெற்று, குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்படுவதாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

    மேலும், விசாரணை நீதிமன்றம் முழுமையாக தவறு செய்துள்ளது என்று குறிப்பிட்ட நீதிபதி வேல்முருகன், பாதிப்புக்குள்ளான அந்த சிறுமி அப்போது யு.கே.ஜி. படித்துக் கொண்டிருந்தால். மருத்துவ பரிசோதனைகள் தேவையில்லை. அந்த சிறுமியின் சாட்சியம் மட்டுமே போதுமானது.

    முன்விரோதம் காரணமாக பெற்றோர் குற்றவாளி மீது பொய்யாக வழக்கு தொடர்ந்தார் என்பதை நிராகரிக்கிறேன். சரியான காரணம் இல்லாமல் சொந்த மகளுக்கு எதிராக எந்தவொரு பெற்றோரும் இதுபோன்று குற்றச்சாட்டமாட்டார்கள்.

    காலம் கடந்து புகார் அளித்துள்ளனர் என்ற வாதத்தையும் நிராகரிக்கிறேன். ஏனென்றால், இதுபோன்ற சம்பவம் நடைபெற்ற உடனேயே பெற்றோர்கள் காவல் நிலையத்திற்கு சென்றுவிட மாட்டார்கள். வழக்கமாக, பெற்றோர்கள் குழந்தையின் எதிர்காலம், குடும்பத்தின் பெருமை குறித்து யோசிப்பார்கள். இதுபோன்ற வழக்கில் தாமதம் என்பது வழக்கிற்கு ஆபத்தானது அல்ல. சம்பவம் நடைபெற்றபோது சிறுமிக்கு 4 வயதுதான். எல்லாவற்றையும் பேசிவார் என எதிர்பார்க்க முடியாது. என்ன நடந்தது என்று கூட அவரால் புரிந்து கொள்ள முடியாது.

    அவர் அந்தரங்க உறுப்பில் வலி ஏற்படுகிறது என்று உணர்ந்தால், தாயாரிடம் கூறுவார். அவருடைய தாயார் போலீசிடம் தெரிவிப்பார்.

    சிறுமிக்கு நான்கு வயதுதான். அவரால் என்ன நடந்தது என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடியாது என்பதை பரிசீலிக்க விசாரணை கோர்ட் தவறிவிட்டது’’ என்றார்.
    Next Story
    ×