search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பயணிகள், தொழிலாளர்கள்.
    X
    கொரோனா பரிசோதனை செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பயணிகள், தொழிலாளர்கள்.

    திருப்பூர் ரெயில் நிலையத்தில் வெளிமாநில பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை

    கொல்கத்தாவில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரெயில் திருப்பூர் வந்தது.
    திருப்பூர்:

    திருப்பூர் பனியன் நிறுவனங்களில் ஏராளமான வெளிமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு வெளிமாநில தொழிலாளர்கள் திருப்பூருக்கு தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர்.  

    இதையடுத்து தொற்று பரவலை தடுக்கும் வகையில் தொழிலாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பிறகே  திருப்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படுகின்றனர். கடந்த சில மாதங்களாக இந்த பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக ரெயில் நிலையத்தில் மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் இன்று கொல்கத்தாவில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரெயில் திருப்பூர் வந்தது. அதில் வந்த பயணிகள், தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பயணிகள்,தொழிலாளர்கள் நீண்ட வரிசையில் நின்று பரிசோதனை செய்து கொண்டனர்.  
    Next Story
    ×