search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அன்புமணி ராமதாஸ்
    X
    அன்புமணி ராமதாஸ்

    ஆசிரியர் வயது வரம்பு உயர்வுக்கு அன்புமணி வரவேற்பு

    வயது வரம்பு உயர்வு குறைந்தது 10 ஆண்டுகளுக்கு செல்லும் என்று அறிவிக்க வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    அரசுப் பள்ளி ஆசிரியர் பணிக்கான வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 40லிருந்து 45 ஆகவும், இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 45லிருந்து 50 ஆகவும் உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இது 40 வயதைக் கடந்தவர்களின் ஆசிரியர் பணி கனவை நனவாக்க உதவும்.

    ஆசிரியர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பை அகற்ற வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. கடந்த ஒரு மாதத்தில் டாக்டர் ராமதாஸ் இருமுறை இந்த கோரிக்கையை வலியுறுத்தினார். பா.ம.க.வின் கோரிக்கை ஓரளவாவது ஏற்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

    வயது வரம்பு உயர்வு அடுத்த ஆண்டு வரை மட்டுமே செல்லும் என அரசு அறிவித்திருப்பது நியாயமல்ல. அடுத்த ஆண்டிற்குள் 42 வயதைக் கடந்த அனைவருக்கும் ஆசிரியர் பணி வழங்க முடியாது. எனவே, வயது வரம்பு உயர்வு குறைந்தது 10 ஆண்டுகளுக்கு செல்லும் என்று அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×