search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    உடுமலை பகுதியில் மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு

    நடப்பாண்டு பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்துக்கு ஆடிப்பெருக்கு நாளன்று திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
    உடுமலை:

    உடுமலை பகுதியில் பிரதானமாக உள்ள விவசாயத்துக்கு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகள் முக்கிய ஆதாரமாக உள்ளன. மேலும் திருமூர்த்தி, அமராவதி அணைகளில் இருந்து குறித்த நேரத்தில் தண்ணீர் திறக்கப்படுவதும் பல ஆயிரம் ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ள முக்கியத்துவம் பெறுகிறது.

    நடப்பாண்டு பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்துக்கு ஆடிப்பெருக்கு நாளன்று திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அமராவதியிலும் நீண்ட இடைவெளிக்குப்பிறகு குறித்த நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மக்காச்சோளம், கரும்பு உட்பட சாகுபடி பணிகள் தொடங்கியுள்ள நிலையில் பயிரின் வளர்ச்சித் தருணத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் மழை பெய்து வருகிறது.

    ஏற்கனவே கால்வாய்களில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் நிலத்தடி நீர் மட்டம் உயரும்.  கிணற்றுப் பாசனத்துக்கு காய்கறி சாகுபடி புத்துயிர் பெறும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்:

    அணைகளிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போதைய மழையால் மழை நீர் ஓடைகளில் நீர் வரத்து தொடங்கியுள்ளது. விளைநிலங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. எனவே நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து கிணறு மற்றும் போர்வெல்களில் நீர்மட்டம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. வரும் சீசனில் காய்கறி சாகுபடி பரப்பு கூடுதலாகும் என்றனர்.
    Next Story
    ×