search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீமான்
    X
    சீமான்

    சங்ககால புலவர் இளவெயினிக்கு மதுரையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும்- சீமான்

    தமிழ்நாடு அரசு இனியும், தமிழ்ப்பழங்குடி மக்களைப் புறக்கணிக்காமல் அவர்களது அருஞ்செயல்களை அங்கீகரிக்க முன் வரவேண்டும் என சீமான் கூறியுள்ளார்.
    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    குறிஞ்சி நிலத் தமிழ்த்தொல்குடி மரபினைச் சேர்ந்த சங்ககாலப் பெண் பாற்புலவர் குறவர்மகள் இளவெயினியின் தமிழ்த் தொண்டினை நினைவுகூரும் வகையில் யாதொரு நினைவுச் சின்னமும் தமிழ்நாட்டில் இதுவரை அமைக்கப்படவில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது.

    தமிழ்நாடு அரசு இனியும், தமிழ்ப்பழங்குடி மக்களைப் புறக்கணிக்காமல் அவர்களது அருஞ்செயல்களை அங்கீகரிக்க முன் வரவேண்டும். தொல் தமிழரின் ஒட்டுமொத்த வாழ்வியலையும், தனது பாடல்கள் மூலம் உலகிற்கு உரத்துக்கூறிய சங்ககாலப் பெண்பாற்புலவர், தலைகுறிஞ்சி நிலம் தந்த பெருமகள் இளவெயினிக்கு, சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மண்ணில் முழு உருவ வெண்கலச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைத்துச் சிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×