search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூர் நகர் பகுதி தண்ணீர் கிராமங்களுக்கு விநியோகம்

    பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளுக்கு தினசரி வினியோகிக்கப்பட வேண்டிய தண்ணீரின் அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    அவிநாசி:

    அவிநாசி பேரூராட்சி மற்றும் சுற்றியுள்ள கிராம ஊராட்சிகளுக்கு மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுநீரை மையமாக வைத்து இரண்டு மற்றும் மூன்றாவது கூட்டு குடிநீர் திட்டப் பணிகளின் கீழ் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. 

    பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளுக்கு தினசரி வினியோகிக்கப்பட வேண்டிய தண்ணீரின் அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

    ஆனால் இது 2001 மக்கள் தொகை அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது என்பதால் தற்போதைய மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப வினியோகிக்கப்படும் தண்ணீர் மக்களுக்கு போதுமானதாக வினியோகிக்கப்படுவது இல்லை.

    இந்நிலையில் அவிநாசி அருகேயுள்ள பழங்கரை, சின்னேரிபாளையம், குப்பாண்டம்பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது என ஊராட்சி மக்கள் கூறி வந்தனர். 

    இப்பிரச்னைக்கு ஓரளவு தீர்வு காணப்பட்டுள்ள நிலையில், பழங்கரை ஊராட்சிக்கான தண்ணீர் சப்ளையில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.

    இதுபோன்ற பிரச்சினையை சமாளிக்க அவிநாசி, திருமுருகன்பூண்டி மற்றும் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளுக்கு வினியோகிக்கப்படும் தண்ணீரை சில மணி நேரம் நிறுத்தி கிராம ஊராட்சிகளுக்கு வடிகால் வாரியத்தினர் தண்ணீர் வினியோகித்து வருகின்றனர். 

    புதிய குடிநீர் திட்டப்பணி நடந்து வருகிறது. இப்பணி முழுமைப்பெறும் வரை இதுபோன்ற பிரச்சினை தவிர்க்க முடியாது என குடிநீர் வடிகால் வாரியத்தினர் தெரிவித்தனர்.
    Next Story
    ×