search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி.
    X
    பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி.

    திருப்பூர் மாவட்டத்தில் அ.தி.மு.க., பொன்விழா கோலாகலமாக கொண்டாட்டம்

    மாநகர் பகுதியில் வார்டு வாரியாக அ.தி.மு.க. கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. 50 - வது ஆண்டு பொன் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு  நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், மேலும் அ.தி.மு.க. கொடியேற்றினார். 

    இந்நிகழ்ச்சியில் கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன், அவை தலைவர் பழனிசாமி, பகுதி செயலாளர்கள் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, சடையப்பன், ஜெயலலிதா பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன், தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், நிர்வாகிகள் உஷாரவிகுமார், அட்லஸ் லோகநாதன், பழனிச்சாமி, ஆண்டவர் பழனிச்சாமி, மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

    மேலும் மாநகர் பகுதியில் வார்டு வாரியாக அ.தி.மு.க. கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதேப்போல் திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட காங்கேயம், பல்லடம், தாராபுரம், உடுமலை உள்பட  பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க.வினர் கட்சி கொடியேற்றியும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

    பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் இந்த ஆண்டு முழுவதும் அ.தி.மு.க. பொன்விழா பல்வேறு நிகழ்ச்சிகளுடன் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகர்ப்பகுதிகளில் அ.தி.மு.க.வின் 50 - வது ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆங்காங்கே அன்னதானம்  வழங்கப்பட்டது. மேலும் கட்சி கொடியேற்றி கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    முன்னாள் அமைச்சரும் பல்லடம் சட்டமன்ற உறுப்பினருமான எம் .எஸ் .எம் . ஆனந்தன் பங்கேற்று நகர நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினார். 

    அப்போது அவர் பேசுகையில், என்னை பல்லடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற வைத்துள்ளீர்கள். கொரோனா பாதிப்பு காரணமாக என்னால் நன்றி தெரிவிக்க செல்ல முடியவில்லை. 

    தற்போது இந்த விழாவில் பொதுமக்களின் பொற்பாதங்களை தொட்டு வெற்றி பெற செய்தமைக்காக நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார். 
    Next Story
    ×