search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் பழங்குடியினர் பகுதிகளில் மேம்பாட்டு பணிகள் செய்வதில் சிக்கல்

    நிதி ஒதுக்கீடு செய்தாலும் முழுமையாக அவர்களை சென்றடைவதில்லை. இதன் காரணமாக குடியிருப்பு வீடுகள் அனைத்தும் தகரத்தினால் ஆன கூரையை கொண்டே காணப்படுகிறது.
    உடுமலை:

    ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்டு உடுமலை, அமராவதி வனச்சரகங்கள் அமைந்துள்ளன. இந்த வனப்பகுதியில் பழங்குடியினர் வசிக்கும் ‘செட்டில்மென்ட்’ பகுதிகள் உள்ளன. 

    புலிகள் பாதுகாப்பு சட்டம் காரணமாக ங்குள்ள குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சோலார் வசதி, வீடுகள் கட்டுமானம் என மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

    இதற்காக நிதி ஒதுக்கீடு செய்தாலும் முழுமையாக அவர்களை சென்றடைவதில்லை என புகார் எழுகிறது. இதன் காரணமாக குடியிருப்பு வீடுகள் அனைத்தும் தகரத்தினால் ஆன கூரையை கொண்டே காணப்படுகிறது. 

    திருமூர்த்திநகர் செட்டில்மென்ட் பகுதியில் மூங்கில் மற்றும் செம்மண்ணை பயன்படுத்தி வீடுகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில்:

    ‘பழங்குடியினர் நலன் கருதி  சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இருப்பினும், போதிய நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெறாத காரணத்தால் பழங்குடியினர் குடியிருப்பு பகுதிகளில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்றனர்.
    Next Story
    ×