search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முட்டை
    X
    முட்டை

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு

    புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி பிறக்க உள்ளதாலும், பிற மண்டலங்களில் முட்டை நுகர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு முட்டை விலையில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
    நாமக்கல்:

    நாமக்கல்லில் பிரதான தொழிலாக விளங்கி வருகிறது முட்டை தொழில். இங்கு 1000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் மூலம் நாள் ஒன்றுக்கு 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம், வெளி மாநிலத்திற்கு முட்டை விற்பனை செய்யப்படுகின்றன. மார்க்கெட்டில் விற்பனை நிலவரங்கள் மற்றும் சூழ்நிலைகளை பொறுத்து முட்டை விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிர்ணயம் செய்து வருகிறது.

    இந்த நிலையில் புரட்டாசி மாதம் பலர் வீடுகளில் முட்டை மற்றும் அசைவ உணவுகளை தவிர்ப்பது வழக்கம். இதனால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையில் மாற்றமின்றி ரூ.4.20 ஆக நீடித்தது. தற்போது புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி பிறக்க உள்ளதாலும், பிற மண்டலங்களில் முட்டை நுகர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு முட்டை விலையில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    அதைத் தொடர்ந்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.4.25-ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. பிற மண்டலங்களில் முட்டை விலை ஆமதாபாத்தில் ரூ.4.50, சென்னையில் ரூ.4.30, சித்தூரில் ரூ.4.23, மும்பையில் ரூ.4.63, மைசூரில் ரூ.4.40, விஜயவாடாவில் ரூ.4.23 ஆக உள்ளது.
    Next Story
    ×