search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாத்துக்குடி
    X
    சாத்துக்குடி

    கோயம்பேடு மார்க்கெட்டில் 2 ஆயிரம் டன் சாத்துக்குடி விற்பனை

    ஆயுத பூஜை பண்டிகை காரணமாக கடந்த 3 நாட்களாக சாத்துக்குடி வரத்து 3 முதல் 4 மடங்காக அதிகரித்தது. சுமார் 2 ஆயிரம் டன் சாத்துக்குடி விற்று உள்ளன.
    போரூர்:

    ஆயுதபூஜை பண்டிகை நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னையில் உள்ள அனைத்து மார்க்கெட்டுகளிலும் பூஜைக்கு தேவையான பூ, பழங்கள் விற்பனை களை கட்டியது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் பூ மார்க்கெட்டுக்கு 100 வண்டிகளில் 550 டன் வரை பூக்கள் விற்பனைக்கு வந்தது. இதில் 400 டன் சாமந்தி பூ, 100 டன் ரோஜா பூ, இதர பூக்கள் 5 டன்னும் வந்திருந்தன.

    இதில் பெரும்பாலான பூக்கள் விற்று தீர்ந்துவிட்டது. சுமார் 500 டன் பூக்கள் விற்றதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதேபோல் பழ மார்க்கெட்டுக்கு கடந்த 12-ந் தேதி முதல் நேற்று வரை 3நாட்களில் 215 லாரிகளில் 2,500 டன் சாத்துக்குடி பழங்களும், 50 லாரிகளில் 900டன் ஆப்பிள் பழங்களும் விற்பனைக்கு குவிந்து இருந்தன. சுமார் 2 ஆயிரம் டன் சாத்துக்குடி விற்றது. 30 லாரி சாத்துக்குடி பழங்கள் விற்பனை ஆகாமல் தேக்கமடைந்துள்ளது.

    மேலும் 150 டன் ஆப்பிள் தேக்கமடைந்துள்ளதாக பழ வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். தேக்கமடைந்து உள்ள ஆப்பிள் பழங்களை கோல்டு ஸ்டோரேஜ்க்கு வியாபாரிகள் கொண்டு சென்று பதப்படுத்தி வைத்துள்ளனர்.

    இதுகுறித்து சாத்துக்குடி மொத்த வியாபாரி முகமது நசீர் கூறியதாவது:-

    கோயம்பேடு பழ மார்க்கெட்டுக்கு தினசரி 20 லாரிகளில் மட்டுமே சாத்துக்குடி விற்பனைக்கு வருவது வழக்கம். ஆனால் ஆயுத பூஜை பண்டிகை காரணமாக கடந்த 3 நாட்களாக அதன் வரத்து 3 முதல் 4 மடங்காக அதிகரித்தது. சுமார் 2 ஆயிரம் டன் சாத்துக்குடி விற்று உள்ளன.

    கடந்த 2 நாட்களாக விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று மார்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வரத்து திடீரென குறைந்து விற்பனை மந்தமானது. இதன் காரணமாக 300 டன் சாத்துக்குடி பழங்கள் தேக்கம் அடைந்து உள்ளன.

    இன்று பழ மார்க்கெட்டுக்கு சரக்குகள் வரவழைக்கப்படவில்லை. தேக்கம் அடைந்துள்ள சாத்துக்குடி மற்றும் ஆப்பிள் பழங்கள் இன்று விற்று தீர்ந்து விடும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×