search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெற்கு ரெயில்வே
    X
    தெற்கு ரெயில்வே

    வருகிற 20 மற்றும் 27-ந் தேதிகளில் பாண்டியன், பல்லவன் ரெயில்கள் எழும்பூரில் இருந்து இயக்கப்படாது

    புதுச்சேரியில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்படும் புதுச்சேரி-டெல்லி சிறப்பு ரெயில் விழுப்புரம், காட்பாடி, பெரம்பூர், கூடூர் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.

    சென்னை:

    பயணிகள் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் தெற்கு ரெயில்வே முறையாக பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக எழும்பூர்-விழுப்புரம் பிரிவில் மதுராந்தகத்தில் பராமரிப்பு பணிகள் வருகிற 20 மற்றும் 27-ந்தேதியில் நடைபெறுகிறது.

    காலை 10.40 மணி முதல் பகல் 2.40 மணி வரை 4 மணி நேரம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் பாண்டியன், பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த 2 ரெயில்களும் பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ரெயில் எண் 02636 மதுரை-எழும்பூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் 20 மற்றும் 27-ந்தேதியில் மதுரையில் காலை 7 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் வந்து சேரும். அங்கிருந்து மாலை 6.10 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும். விழுப்புரம்-எழும்பூர் இடையே சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல எழும்பூரில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்படும் (எண் 02605) காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் எழும்பூர்-விழுப்புரம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் இருந்து மாலை 6.10 மணிக்கு புறப்பட்டு காரைக்குடி செல்லும்.

    புதுச்சேரியில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்படும் புதுச்சேரி-டெல்லி சிறப்பு ரெயில் விழுப்புரம், காட்பாடி, பெரம்பூர், கூடூர் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.

    எழும்பூர் வருவதற்கு பதிலாக பெரம்பூர் வழித்தடத்திற்கு மாற்றப்பட்டு இந்த ரெயில் இயக்கப்படுகிறது.

    இதையும் படியுங்கள்...எல்லை தாண்டி வந்ததாக கூறி நாகை மீனவர்கள் 23 பேர் படகுகளுடன் சிறைப்பிடிப்பு

    Next Story
    ×