search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மல்லிகை பூ
    X
    மல்லிகை பூ

    கோவையில் பூக்கள், பழங்கள் விலை உயர்வு

    கடந்த வாரம் கிலோ ரூ. 500-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ இன்று ரூ.1,200 -க்கு விற்பனை செய்யப்பட்டது.
    கோவை:

    ஆயுத பூஜை நாளை(புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி தொழில் நிறுவனங்களில் எந்திரங்களுக்கு பூஜை செய்வது வழக்கம். மேலும் பொதுமக்களும் தங்ளது வீடுகளிலும் பூக்கள், பழங்கள், வாழை கன்றுகள், பொரி, சுண்டல் உள்ளிட்ட பொருட்களை வைத்து பூஜை செய்து சாமி கும்பிடுவார்கள்.

    இதையடுத்து இன்று கோவையில் உள்ள பூ மார்க்கெட், கடைவீதிகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.

    அங்கு அவர்கள் சாமி கும்பிட தேவையான பூ, பழம், பொரி, வாழை இலை, உள்ளிட்ட பொருட்களை வாங்கி சென்றனர். எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது. இதனால் முக்கிய வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    தொடர் மழையால் பூக்கள் வரத்து குறைந்ததால் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ. 500-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ இன்று ரூ.1,200 -க்கு விற்பனை செய்யப்பட்டது.

    ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்ட ஜாதி மற்றும் முல்லை ரூ.720-க்கும், செவ்வந்திப்பூ ரூ.200 -க்கும், அரளி ரூ400-க்கும், கோழிக்கொண்டை ரூ.100 -க்கும், சம்பங்கி ரூ.320, முல்லை ரூ.800, வாடாமல்லி ரூ.100, ரோஜா ரூ.320, தாமரை ஒரு பூ ரூ.50, மரிக்கொழுந்து ஒரு கட்டு ரூ.40, துளசி ஒரு கிலோ ரூ.50 விற்பனை செய்யப்பட்டது.

    இதேபோல 1½ மாலை ரூ.150-க்கும், 2 அடி மாலை ரூ.200-க்கும், 2 அடி ரோஜா பூ மாலை ரூ.250-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 3 அடி உயரமுள்ள வாழை கன்று ஜோடி ரூ.30 முதல் ரு.40 வரை விற்பனை செய்யப்பட்டது.

    பன்னீர் திராட்சை கிலோ கடந்த வாரம் ரூ.60 முதல் ரூ. 70 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது தொடர்மழை காரணமாக வரத்து குறைந்ததால் ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆப்பிள்-ரூ.160, மாதுளை-ரூ.180, சாத்துக்குடி-ரூ.80, ஆரஞ்சு-ரூ.100, கொய்யா-ரூ.100, கரும்பு 1 கட்டு-ரூ.800க்கு விற்பனையானது. பூவன் பழம் ரூ. 40-க்கும், செவ்வாழை தார் ரூ.800-க்கும், கற்பூரவள்ளி தார் ரூ.600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது

    இதேபோல் வாழைகுலை 1-ரூ.20க்கும, தென்னங்குருத்து 5 இலை-ரூ.20க்கும், மாவிலை 1 கட்டு-ரூ.30க்கும், வெத்திலை 1 கவுலி-ரூ.100க்கும், எலுமிச்சை 1 கிலோ ரூ.100க்கும் , தேங்காய் 1 ரூ.20க்கும், பூசணிக்காய் ரூ.30க்கும் விற்பனையாது. பொரி 1படி ரூ.10க்கும், அவல் 100 கிராம் ரூ.10க்கும் விற்பனையாது.

    பூஜைக்கு பயன்படுத்தப்படும் பூவன் வாழைத்தார் கடந்த வாரம் ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது விலை உயர்ந்து ரூ.1,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    Next Story
    ×