search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஆக்கிரமிப்புகள் அகற்றம் - பாலாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

    இரு புறமும் உள்ள விவசாய நிலங்களின் கிணறு, போர்வெல்களின் நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்திற்குச் சென்று பசுமை பகுதியும் வறட்சிப் பகுதியாக மாறி வருகிறது.
    உடுமலை:

    உடுமலை அருகே  மேற்கு தொடர்ச்சிமலையில் உருவாகி திருமூர்த்தி மலையில் இருந்து மேற்கு நோக்கி, 60 கி.மீ., தூரம் பாலாறு பயணிக்கிறது. அதன் துணை ஆறாக நல்லாறு மற்றும் ஓடை, சிற்றாறுகள் பாலாற்றில் இணைகிறது. 

    பசுமை சூழ்ந்த மலை மற்றும் தென்னை உள்ளிட்ட விவசாய பூமிகள் என பாலாறு ஓடுவதால் விவசாயம் மற்றும் வழியோர கிராமங்களுக்கான குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. உடுமலை பகுதியில் மேற்கு நோக்கி பாயும் ஆறுகளான பாலாறு, நல்லாறு  ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டு வந்தது. 

    ஆற்றின் இரு கரைகளும் ஆக்கிரமிக்கப்பட்டு நீர் வழித்தடம் மறிக்கப்பட்டதால் நீர் ஓட வழியில்லாமல் நாணல், முட்செடிகள், சீமைக்கருவேல மரங்கள் என புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் வழியோரத்திலுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிரந்தரமாக உள்ளது.

    இரு புறமும் உள்ள விவசாய நிலங்களின் கிணறு, போர்வெல்களின் நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்திற்குச் சென்று பசுமை பகுதியும் வறட்சிப் பகுதியாக மாறி வருகிறது.

    எனவே அழிந்து வரும் பாலாறு, நல்லாறு மற்றும் ஓடைகளை மீட்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வந்தது. 6 ஆண்டுக்கு முன் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் குழு அளவீடு பணி மேற்கொண்டு எல்லைகள் அடையாளமிடப்பட்டது.

    ஆனால் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் இழுபறியாகி வந்தது. தற்போது பாலாற்றில் ஜே.கிருஷ்ணாபுரம், ஜே.என்., பாளையம் பகுதிகளில் ஆற்றின் இரு கரைகளிலும் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

    1.25 கி.மீ., நீளத்தில் 38 ஏக்கர் பரப்பில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 223 தென்னை மரங்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன. பி.ஏ.பி., உடுமலை கோட்ட உதவி செயற்பொறியாளர் காஞ்சி துரை, உதவி பொறியாளர் மாரிமுத்து, வருவாய் ஆய்வாளர் ஹேமா மற்றும் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 

    பாலாறு மற்றும் நல்லாறு வன எல்லை பகுதிளில் அமைத்துள்ளதால் திருமூர்த்தி அணை துவங்கி 60 கி.மீ., தூரம் வரை இரு கரைகளிலும் ஆக்கிரமிப்புகள் அபரிமிதமாக காணப்படுகிறது. தற்போது 1.25 கி.மீ., தூரம் மட்டுமே அகற்றப்பட்டுள்ளது.

    மீதம் உள்ள அனைத்து பகுதிகளிலும் விரிவாக ஆய்வு நடத்தி பாரபட்சமின்றி அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும். நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில் ஆறு மற்றும் ஓடைகளின் குறுக்கே தேவையான இடங்களில் தடுப்பணைகள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×