search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மல்லிகைப்பூ
    X
    மல்லிகைப்பூ

    ஆயுத பூஜையையொட்டி பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

    ஆயுத பூஜையையொட்டி பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. குண்டுமல்லி, முல்லை கிலோ ரூ.1,100-க்கு விற்பனை செய்யப்பட்டது.
    நொய்யல்:

    கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, பேச்சிப்பாறை, நடையனூர், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் குண்டுமல்லி, முல்லை, செவ்வந்தி, உள்ளிட்ட பல்வேறு பூக்களை பயிரிட்டுள்ளனர்.

    இந்தநிலையில் நாளை (வியாழக்கிழமை) ஆயுதபூஜை என்பதால் கரூர், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் போட்டி போட்டு கொண்டு பூக்களை அதிக விலைக்கு வாங்கி சென்றனர். இதனால் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு குண்டுமல்லிகை ஒரு கிலோ ரூ.400-க்கும், முல்லை ரூ.400-க்கும், செவ்வந்தி ரூ.100-க்கும், அரளி ரூ.170-க்கும், சம்பங்கி ரூ.160-க்கும், ரோஜா ரூ.140-க்கும், கோழிக்கொண்டை ரூ.30-க்கும், மருவு ஒரு கட்டு ரூ.15-க்கும், ஆடாதொடை இலை ஒரு கட்டு ரூ.5-க்கும், துளசி ஒரு கட்டு ரூ.5-க்கும் விற்பனையானது.

    நேற்று குண்டுமல்லி கிலோ ரூ.1,100-க்கும், முல்லை ரூ.1,100-க்கும், செவ்வந்தி ரூ.270-க்கும், அரளி ரூ.700-க்கும், சம்பங்கி ரூ.320-க்கும், ரோஜா ரூ.320-க்கும், கோழிக்கொண்டை ரூ.90-க்கும், மருவு ஒரு கட்டு ரூ.50-க்கும், ஆடாதொடை இலை ஒரு கட்டு ரூ.15-க்கும், துளசி ஒரு கட்டு ரூ.15-க்கும் விற்பனையானது.

    ஆயுத பூஜையையொட்டி பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×