search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    உடுமலை ஆர்.வேலூர் ஊராட்சி தலைவர் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி

    இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தங்கபாண்டி 381 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்
    உடுமலை:

    உடுமலை ஒன்றியம் ஆர்.வேலூர் ஊராட்சி தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் நடை பெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் அன்னலட்சுமி, தி.மு.க. சார்பில் கலாமணி, சுயேட்சையாக உமா ஆகியோர் ஆகியோர் போட்டியிட்டனர். மொத்தம் 959 வாக்குகள் பதிவாகின. 

    இன்று காலை 8 மணிக்கு உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் அன்னலட்சுமி 460 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கலாமணி 417 வாக்குகளும், உமா 78 வாக்குகளும் பெற்றிருந்தனர். செல்லாத ஓட்டுகள் 5 பதிவாகியிருந்தது.

    திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒன்றியம்கருப்பன் வலசு ஊராட்சி மன்றம் 2-வது வார்டு உறுப்பினருக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் செல்வி வெற்றி பெற்றார்.

    அவினாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சி 9-வார்டு உறுப்பினர் தேர்தலில் தங்கபாண்டி, சுரேஷ், சிவா, சிதம்பரம், சம்பத்குமார் ஆகியோர் போட்டியிட்டனர். 

    இதில் மொத்தம் 861 வாக்குகள் பதிவாகின. இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில்  தங்கபாண்டி 381 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சுரேஷ்-219, சிவா-56. சிதம்பரம்-39, சம்பத்குமார்-174 வாக்குகள் பெற்றிருந்தனர்.
      
    தாராபுரம் ஒன்றியம் 12-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் தி.மு.க. சார்பில் சுப்பிரமணி, பா.ஜ.க.சார்பில் முருகசாமி, அ.ம.மு.க. சார்பில் திருவிணாங்குடி போட்டியிட்டனர். மொத்தம் 3,998 வாக்குகள் பதிவாகியது.

    6-வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க.வை சேர்ந்த சுப்பிரமணி 1605 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். பா.ஜ.க.முருகசாமி 731 வாக்குகளும், அ.ம.மு.க. திருவிணாங்குடி 17 வாக்குகளும் பெற்றிருந்தனர். 
    Next Story
    ×