search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல்லடத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்ட போது எடுத்த படம்.
    X
    பல்லடத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்ட போது எடுத்த படம்.

    இரும்பு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

    திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகா வடுகபாளையம் கிராமத்தில் தனியார் இரும்பு உருக்காலை அமைக்கவுள்ளதாக தெரிகிறது.
    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் குண்டடம் அருகேயுள்ள வடுகபாளையத்தில் தனியார் இரும்பு உருக்காலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கொழுமங்குளி, சங்கரண்டாம்பாளையம், வடுகபாளையம், சிறுகிணார், கண்ணாங்கோவில் ஆகிய கிராமங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல்லடத்தில் உள்ள திருப்பூர் தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். 

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

    திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் தாலுகா வடுகபாளையம் கிராமத்தில் தனியார் இரும்பு உருக்காலை அமைக்கவுள்ளதாக தெரிகிறது. வடுகபாளையம் பகுதியில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் பிரதானமாக நடைபெற்று வருகிறது. 

    இந்த பகுதியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கிராமங்களில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தனியார் நிறுவனம்,பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டங்கள் முறையாக நடத்தாமல், வடுகபாளையத்தில் இரும்பு உருக்காலை அமைக்க அனுமதி பெற்று உள்ளதாக தெரிகிறது. 

    அந்த ஆலை அமைக்கும்பட்சத்தில் வெளியேறும் புகை மற்றும் இரும்பு துகள்களால் விவசாயம் மற்றும் நிலத்தடி நீர் மாசடையும். கால்நடை உள்ளிட்ட உயிரினங்கள் இறக்க நேரிடும். 

    மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தனியார் இரும்பு உருக்காலை அமைக்க அனுமதி அளிக்கக் கூடாது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×