search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மழையால் செழித்து வளர்ந்த கொழுக்கட்டை புற்கள் - மாடுகளில் பால் உற்பத்தி அதிகரிப்பு

    வழக்கமாக 1 லிட்டர் பால் கொடுக்கும் மாடு தற்போது 4 லிட்டர் வரை பால் கொடுக்கிறது.
    காங்கேயம்:

    காங்கேயம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் மேய்ச்சல் நிலங்களில் கொழுக்கட்டை புற்கள் செழித்து வளர்ந்துள்ளது. இந்த புற்களால் கால்நடைகளுக்கு தீவனப் பிரச்சினை தீரும் நிலை ஏற்பட்டுள்ளது. 

    இதுவரை விவசாயிகள் பச்சை அல்லாத காய வைக்கப்பட்ட வைக்கோல், சோளத்தட்டு உள்ளிட்டவற்றை கால்நடைகளுக்கு கொடுத்து வந்தனர். தற்போது மழை பெய்து மேய்ச்சல் நிலங்களில் கொழுக்கட்டை புற்கள் செழித்து வளர்ந்துள்ளதால் கால்நடைகளை மேய்ச்சல் நிலத்தில் மேய விட்டு வருகின்றனர். இதனால் தீவனப் பிரச்சனை தீர்ந்து உள்ளது. 

    இந்த கொழுக்கட்டை புற்களை கறவை மாடுகள் உண்பதால் பால் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. வழக்கமாக 1 லிட்டர் பால் கொடுக்கும் மாடு தற்போது 4 லிட்டர் வரை பால் கொடுக்கிறது. இதனால் கொள்முதல் நிலையங்களுக்கு பால் வரத்தும் அதிகரித்துள்ளது.
    Next Story
    ×