search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்ளாட்சி தேர்தல்
    X
    உள்ளாட்சி தேர்தல்

    ஊரக உள்ளாட்சி தேர்தல் - பாதுகாப்புடன் இன்று வாக்கு எண்ணிக்கை

    வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதி முழுவதும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் பதிவு செய்யப்படுகிறது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 6-ம் தேதி, 9-ம் தேதி ஆகிய 2 நாட்கள் தேர்தல் நடத்தப்பட்டது.

    மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து உறுப்பினர் ஆகிய 4 பதவிகளை தேர்வு செய்வதற்காக தேர்தல் நடந்தது.

    6-ம் தேதி நடந்த முதல் கட்ட தேர்தலில் 77.43 சதவீத ஓட்டுகளும், 9-ம் தேதி நடந்த தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்தன.

    இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.

    இதற்காக 9 மாவட்டங்களில் 74 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் இந்த ஓட்டு எண்ணும் மையங்களை அமைத்து இருக்கிறார்கள்.

    இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. பழைய முறைப்படி ஓட்டுச்சீட்டு அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.

    பாதுகாப்புப் பணியில் போலீசார்

    வாக்கு எண்ணுவதை கண்காணிக்க சென்னையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

    அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மொத்தம் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி 20-ம் தேதி நடைபெற உள்ளது.

    Next Story
    ×