search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மங்கலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விசைத்தறி தொழிற்சங்கத்தினர்.
    X
    மங்கலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விசைத்தறி தொழிற்சங்கத்தினர்.

    கூலியை உயர்த்தி வழங்க கோரி விசைத்தறி தொழிற்சங்கத்தினர் தர்ணா போராட்டம்

    விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு ஒப்பந்தம் 2014ல் போடப்பட்டு 7 ஆண்டுகள் ஆகிறது.
    மங்கலம்:
     
    திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் இன்று அனைத்து விசைத்தறி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. 

    விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். கூலி உயர்வு ஒப்பந்தத்தை உடனே ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்தில் ஈடுபட்ட விசைத்தறியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    பின்னர் அவர்கள் கூறிய தாவது:

    விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு ஒப்பந்தம் 2014ல் போடப்பட்டு 7 ஆண்டுகள் ஆகிறது. தற்போது ஏறியுள்ள கடுமையான விலைவாசி உயர்வால் தொழிலாளர்கள் குடும்பம் நடத்த மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். 

    இத்தொழிலில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தறிகளின் எண்ணிக்கையும், வேலை செய்யும் நேரமும் அதிகமானதே தவிர போதுமான சம்பளம் கிடைக்கவில்லை. பண்டிகை விடுமுறையும் இல்லை

    கூலி உயர்வு ஒப்பந்தம் முடிந்து விட்ட நிலையில் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்திட விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் முன்வராமல் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நேரில் வலியுறுத்தியும் எந்த பயனும் இல்லை. எனவே விசைத்தறி தொழிலையும், விசைத்தறி தொழிலாளர்களையும் பாதுகாக்க போராடுகிறோம் என்றனர். 
    Next Story
    ×