search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சினிமா படப்பிடிப்பு நடைபெற்ற உடுமலை பழைய நகராட்சி அலுவலகம்.
    X
    சினிமா படப்பிடிப்பு நடைபெற்ற உடுமலை பழைய நகராட்சி அலுவலகம்.

    உடுமலையில் உதயநிதி ஸ்டாலின் சினிமா படப்பிடிப்பு

    உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை கனா காணும் காலம் பட டைரக்டர் அருண்ராஜா காமராஜ் இயக்கி வருகிறார்.
    உடுமலை:

    உடுமலை தளி மெயின் ரோட்டில் மிகவும் பழமை வாய்ந்த பழைய நகராட்சி அலுவலக கட்டிடம் உள்ளது. இங்கு நடிகரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ஆர்டிக்கிள்-15 சினிமா படப்பிடிப்பு இன்று நடைபெற்றது.

    இப்படத்தை டைரக்டர் அருண்ராஜா காமராஜ் இயக்கி வருகிறார். உடுமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் அரசு மருத்துவமனை உருவாக்கப்பட்டு அறிஞர் அண்ணா அரசு பொது மருத்துவமனை என்ற பெயரில் போர்டு வைக்கப்பட்டு சினிமா படப்பிடிப்பு நடைபெற்றது.

    அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒருவரை விசாரிப்பதற்காக டி.எஸ்.பி., வேடத்தில் உதயநிதி ஸ்டாலின் வருவது போன்ற காட்சி இன்று படமாக்கப்பட்டது. 
    Next Story
    ×