search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனு கொடுக்க வந்த பொதுமக்கள்.
    X
    மனு கொடுக்க வந்த பொதுமக்கள்.

    இரும்பு ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மனு

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வடுகபாளையம் கிராமத்தில் தனியார் இரும்பு ஆலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    திருப்பூர்:

    தாராபுரம் அருகே அமைக்கப்படும் இரும்பு ஆலையால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அந்த ஆலைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

    இதுகுறித்து திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வடுகபாளையம், சங்கரண்டாம்பாளையம், கொழுமங்குளி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள்  திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு கொடுத்தனர்.
     
    அதில் கூறியிருப்பதாவது:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வடுகபாளையம் கிராமத்தில் தனியார் இரும்பு ஆலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தொழிற்சாலை சட்டங்களின் படி உரிய அனுமதி பெறாமலும்,  பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தாமலும் உயர் அதிகாரிகள் துணையுடன் அனுமதி பெற்றுள்ளனர். 

    அந்த ஆலை அமைக்கப்படுமானால் அதில் இருந்து வெளியேறும் புகை மற்றும் இரும்பு துகள்களால் எங்கள் பகுதி விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும். கால்நடைகள் இரும்பு துகள்களை  உண்ண வேண்டிய நிலை ஏற்பட்டு உடல் நிலை பாதிக்கப்படும் நிலை உருவாகும். 

    பட்டுபூச்சி செடிகளில் படர்ந்தால் ஒட்டுமொத்த பட்டுச்செடியும் பாதிக்கப்படும். கோழிப் பண்ணைகளில் உள்ள கோழிகள் பாதிக்கப்படும். பல லட்சம் லிட்டர் தண்ணீர் ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் போது விளைநிலங்கள் பாதிக்கப்படும்.  

    நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயமும் உள்ளது. ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அமராவதி ஆற்றில் கலக்குவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே இரும்பு ஆலை அமைக்க அனுமதி அளிக்கக் கூடாது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை தமிழக முதல்வருக்கும் அனுப்பி உள்ளனர். 
    Next Story
    ×