search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறப்பு ரெயில்
    X
    சிறப்பு ரெயில்

    ஆயுத பூஜை, தீபாவளியை முன்னிட்டு கோவை-சென்னை இடையே சிறப்பு ரெயில்கள்

    சென்னை சென்ட்ரல்-கோவை இடையேயான அதிவிரைவு சிறப்பு ரெயில் (எண்:06005) சென்னையில் இருந்து நாளை மறுநாள் 13-ந் தேதி மற்றும் நவம்பர் 3-ந் தேதி இயக்கப்படுகிறது.
    கோவை:

    கோவை-சென்னை சென்ட்ரல் இடையே ஆயுதபூஜை, தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து சேலம் கோட்ட ரெயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி பண்டிகை காலத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னை சென்ட்ரல்-கோவை இடையே அதிவிரைவு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

    அதன்படி சென்னை சென்ட்ரல்-கோவை இடையேயான அதிவிரைவு சிறப்பு ரெயில் (எண்:06005) சென்னையில் இருந்து நாளை மறுநாள் 13-ந் தேதி மற்றும் நவம்பர் 3-ந் தேதி இயக்கப்படுகிறது.

    இந்த ரெயில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக மறுநாள் காலை 7.30 மணிக்கு கோவை ரெயில் நிலையம் வந்தடையும்.

    இதே போன்று கோவை-சென்னை சென்ட்ரல் இடையேயான அதிவிரைவு சிறப்பு ரயில் (எண்:06006) கோவையில் இருந்து 17-ந் தேதி மற்றும் நவம்பர் 7-ந் தேதிகளில் இயக்கப்படுகிறது. கோவையில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி வழியாக மறுநாள் காலை 7.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் சென்றடையும்.

    இதில் பயணிப்பதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோன்று சென்னை எழும்பூரில் இருந்து கோவை வழியாக மங்களூர் சென்ட்ரலுக்கு வருகிற 17-ந் தேதி முதல் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.35-க்கு புறப்பட்டு செங்கல்பட்டு, ஈரோடு, திருப்பூர் வழியாக மறுநாள் காலை கோவைக்கு 10.52-க்கு வந்தடையும். இங்கிருந்து 10.55-க்கு புறப்பட்டு மங்களூர் சென்ட்ரலுக்கு இரவு 10.15-க்கு சென்றடைகிறது.

    மங்களூர் சென்ட்ரலில் இருந்து 19-ந் தேதி காலை 6.45 முதல் இந்த ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் கோவைக்கு 3.42 வந்தடைந்து 3.45-க்கு புறப்பட்டு சென்னை எழும்பூருக்கு மறுநாள் காலை 3.35-க்கு சென்றடைகிறது.

    Next Story
    ×