search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்.
    X
    கொரோனா வைரஸ்.

    திருப்பூரில் கொரோனா பாதிப்பு திடீர் உயர்வு - இலக்கை எட்டாத 5வது கட்ட தடுப்பூசி முகாம்

    திருப்பூர் மாவட்டத்தில் நேற்று நடந்த 5&வது கட்ட தடுப்பூசி முகாமில் 78, 396 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏறி இறங்கி வருகிறது. நேற்று திடீரென 91 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. கடந்த 6 நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 70 முதல் 79 என்ற நிலையில் தொடர்ந்த நிலையில் நேற்று 91 பேருக்கு தொற்று உறுதியானது சுகாதாரத்துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மாவட்டத்தில் இதுவரை 93 ஆயிரத்து 820 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 86 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். 

    அவர்களுடன் சேர்த்து 92 ஆயிரத்து 39 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 

    மாவட்டத்தில், 962 பேர் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 819 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.

    இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தில் நேற்று நடந்த 5 - வது கட்ட தடுப்பூசி முகாமில் 78,396 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 1.40 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில் 78, 396 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. 

    கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி ஒன்றே தற்போதைய தீர்வாக உள்ளது. எனவே தடுப்பூசி செலுத்தாதவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டுமென அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.  
    Next Story
    ×