search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    சென்னையில் 2-வது நாளாக கொரோனா உயிரிழப்பு இல்லை

    சென்னையில் நோய் தொற்று பரவல் குறைந்து வருவதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் 18 மாவட்டங்களில் தொற்று விகிதம் குறைந்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் அரசின் தீவிர நடவடிக்கையால் குறைந்து வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி கட்டாயம் செலுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்கும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    தற்போது நோய் தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    கொரோனா 1-வது அலை, 2-வது அலையின் போது சென்னையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. தொற்று பரவலை கட்டுப்படுத்துவதிலும் சிரமம் இருந்தது.

    இப்போது சென்னை மக்களை அச்சுறுத்தி வந்த நோய் தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

     

    கொரோனா தடுப்பூசி

    கடந்த 2 நாட்களாக சென்னையில் கொரோனாவால் உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல் தரும் வகையில் உள்ளது. இது அனைவரது முகத்திலும் நிம்மதி பெருமூச்சை வர வழைத்து இருக்கிறது.

    கடந்த 7-ந்தேதி மற்றும் 8-ந்தேதி தலா 3 பேர் உயிரிழந்து இருந்தனர். தடுப்பூசி மற்றும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சென்னையில் நோய் தொற்று பரவல் விகிதம் வேகமாக குறைந்துள்ளது. இதனால் தினசரி பாதிப்பு 200-க்கும் கீழ் சரிந்துள்ளது.

    நேற்று முன்தினம் 164 பேரும், நேற்று 171 பேரும் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னையில் இதுவரை 5 லட்சத்து 51 ஆயிரத்து 611 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 5 லட்சத்து 41 ஆயிரத்து 257 பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள். 1,634 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். நோய் தொற்று காரணமாக 2,360 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

    சென்னைக்கு அடுத்த இடத்தில் அதிக பாதிப்பு கோவை மாவட்டத்தில் உள்ளது. இங்கு நேற்று மட்டும் 132 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.

    சென்னையில் நோய் தொற்று பரவல் குறைந்து வருவதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் 18 மாவட்டங்களில் தொற்று விகிதம் குறைந்துள்ளது.

    இதையும் படியுங்கள்... புகையிலை பொருட்களை கட்டுப்படுத்த சட்ட திருத்தம் வேண்டும்- மத்திய சுகாதார மந்திரிக்கு அன்புமணி கடிதம்

    Next Story
    ×