search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தீவிரம் - சிறப்பு குழுக்கள் அமைப்பு

    தாலுகா தோறும் ஆர்.டி.ஓ., உள்ளிட்ட துணை கலெக்டர்கள் தலைமையில் 40 முதல் 50 பேர் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    திருப்பூர்:

    வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதால் அதற்கான முன்னேற்பாடுகளை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது. மழை வெள்ளத்தால் ஏற்படும் சேதத்தை தடுக்கவும், மீட்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும் வசதியாக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    தாலுகா தோறும் ஆர்.டி.ஓ., உள்ளிட்ட துணை கலெக்டர்கள் தலைமையில் 40 முதல் 50 பேர் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

    வெள்ளசேதம் ஏற்படும் பகுதிகளில் எச்சரிக்கை முன்னறிவிப்பு செய்யவும், முன்னேற்பாடுகளை செய்யவும் வசதியாக தாசில்தார், மாநகராட்சி அதிகாரிகள், போலீசார், நில வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் என 15 பேர் அடங்கிய முன்னெச்சரிக்கை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு தாலுகாவிலும் போலீசார் அதிகாரிகள் அடங்கிய ஆய்வுக் குழுவும், தீயணைப்புத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் அடங்கிய மீட்பு குழுக்கள், மாநகராட்சி அதிகாரிகள், பி.டி.ஓ.,க்கள், சுகாதாரத்துறை, கால்நடை மருத்துவமனை, சமூக நலத்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த 20 பேர் அடங்கிய குழுவினர் மூலம் நிவாரண முகாம் அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    திருப்பூர் வடக்கு தாலுகா கண்காணிப்பு அதிகாரியாக, ஆர்.டி.ஓ., ஜெகநாதன்,  திருப்பூர் தெற்கு - நுகர்பொருள் வாணிபக கழக மண்டல மேலாளர் குணசேகர், அவிநாசி - பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் வாசுகி, பல்லடம் - மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன், ஊத்துக்குளி - தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு) சிவகுமாரி, தாராபுரம் - சப் கலெக்டர் ஆனந்த் மோகன், காங்கயம் தாலுகா - கலால் உதவி கமிஷனர் சுகுமார்,  உடுமலை - உடுமலை ஆர்.டி.ஓ., கீதா, மடத்துக்குளம் - ஆதிதிராவிடர் நல அலுவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தாலுகா மற்றும் வார்டு அல்லது பகுதி வாரியாக தலா 15 தன்னார்வலர்கள் அடங்கிய முதல் உதவிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தேவையான மருந்து பொருட்களுடன் தயார் நிலையில் இருப்பார்கள். 

    வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிக்கு விரைந்து மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×