search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திங்கள் நகர், மண்டைக்காடு அருகே கஞ்சா-போதை மாத்திரைகளுடன் 2 வாலிபர்கள் கைது

    திங்கள் நகர், மண்டைக்காடு அருகே கஞ்சா-போதை மாத்திரைகளுடன் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரணியல்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை முற்றிலும் கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவிட்டுள்ளார்.

    இதையடுத்து போலீசார் கஞ்சா விற்பனை மற்றும் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஏராளமானோர் கைது செய்யப்பட்டு பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று மண்டைக்காடு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் நடுவூர்கரை பஸ் நிலையப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர் முன்னுக்கு பின் பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் அவரை சோதனை செய்தனர். இதில் அவர்கள் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த 1300 கிலோ கிராம் கஞ்சா மற்றும் 30 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் காஞ்சிரம் விளை பகுதியை சேர்ந்த ரதீஷ் (வயது26)என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இரணியல் அருகே உள்ள திங்கள் நகர் பஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர மூர்த்தி தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    இதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை சோதனை செய்த போது அவர் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த ஒரு கிலோ கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அதை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் ஜெனீஸ் (20) என்பதும், இவர் திக்கணங்கோடு கொல்லாய் பகுதியை சேர்ந்த உதய குமார் என்பவரின் மகன் என்பதும் தெரிய வந்தது. அவரை கைது செய்து போலீசார் இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் கூறும்போது, கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×